கவனம் ஈர்க்கும் நாவல்கள்

தமிழின் காத்திரமிகு எழுத்துக்குச் சொந்தக்காரர் இமையம். மூர்க்கமும் வெள்ளந்தித்தனமும் ஒருங்கே அமைந்த கதைகளை எழுதி வருபவர்.

கவனம் ஈர்க்கும் நாவல்கள்

தமிழின் காத்திரமிகு எழுத்துக்குச் சொந்தக்காரர் இமையம். மூர்க்கமும் வெள்ளந்தித்தனமும் ஒருங்கே அமைந்த கதைகளை எழுதி வருபவர். அவரது புதிய நாவல் ‘நெஞ்சறுப்பு’ (க்ரியா பதிப்பகம்) இந்தப் புத்தகக் காட்சியை ஒட்டி வெளியாகியுள்ளது. புதிய பொருளா
தாரம், சமூக மாற்றம் குறித்து எழுதும்போது அது எளிய மக்களின் வாழ்க்கையில் விளைவித்த பாதிப்பு என்கிற கோணத்தில்தான் இமையம் எழுதுவார். அந்தப் பண்புக்கான சாட்சி இந்த நாவல்.

தமிழ் நவீன நாவலாசிரியர்களில் விசேஷமானவர் வண்ணநிலவன். அவரது ‘கடல்புரத்தில்’, ‘ரெயினீஸ் ஐயர் தெரு’ போன்ற நாவல்கள் தமிழ் நவீன கிளாசிக்குகளாகக் கருதப்படுகின்றன. வண்ணநிலவன் திருநெல்வேலியில் ஒரு வழக்கறிஞரிடம் குமாஸ்தாவாக வேலைபார்த்தவர். நீதித் துறையுடன் நெருங்கிய அந்தத் தொடர்பு தந்த அனுபவங்களை அவர் எழுதியிருக்கிறார். அது போன்ற அனுபவங்களின் தொகுப்பாக ‘கருப்புக் கோட்டு’ நாவல் (காலச்சுவடு) வெளியாகியுள்ளது.