கழிவுநீரால் மாசடைந்துவரும் புழல் ஏரி
சென்னை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்தில் உள்ள புழல் ஏரி, 18 சதுர கி.மீ. பரப்பளவில், செங்குன்றம், புழல், பம்மதுகுளம், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பரந்து விரிந்துள்ளது.
சென்னை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்தில் உள்ள புழல் ஏரி, 18 சதுர கி.மீ. பரப்பளவில், செங்குன்றம், புழல், பம்மதுகுளம், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பரந்து விரிந்துள்ளது. தற்போது 21.20 அடி உயரமும், 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவும் கொண்டதாக உள்ளது.
புழல் ஏரியில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழைநீரும், பூண்டி ஏரியிலிருந்து வரும் கிருஷ்ணா நீரும், சோழவரம் ஏரி நீரும் சேமிக்கப்பட்டு, சென்னையின் குடிநீர் தேவைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில், திருமுல்லைவாயில் மற்றும் அம்பத்தூரில் குடியிருப்பு பகுதிகள், சிறு தொழில்நிறுவனங்கள் உள்ளிட்டவை வெளியேற்றும் கழிவுநீரால் புழல் ஏரி மாசடைந்து வருகிறதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.