வளர்ப்பு யானைகளை மேலாண்மை செய்ய விதிகளைப் பின்பற்ற வேண்டும்: இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தல்
வளர்ப்பு யானைகளை மேலாண்மை செய்ய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கோவை: வளர்ப்பு யானைகளை மேலாண்மை செய்ய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழக அரசின் இந்துசமய அறநிலையத்துறையின் சார்பில், ஒவ்வொரு ஆண்டும், கோயில் யானைகளுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்துவதற்காக 48 நாட்கள் யானைகள் நல வாழ்வு முகாம் நடத்தப்படுகிறது.
முதன்முதலாக, நீலகிரி மாவட்டம் முதுமலை அருகேயுள்ள தெப்பக்காட்டில், கடந்த 2003-ம் ஆண்டு யானைகள் நலவாழ்வு முகாம் நடத்தப்பட்டது. கடந்த 2012-ம் ஆண்டு முதல் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள, தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையை ஒட்டியுள்ள பகுதியில் யானைகள் நல வாழ்வு முகாம் நடத்தப்பட்டது. கடைசியாக கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோவையில் யானைகள் முகாம் நடத்தப்பட்டன. யானைகள் நல வாழ்வு முகாமில், தினமும் யானைகளுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.