நாட்டின் புவியியல் பரப்பளவில் 25.17% காடுகள் - புதிய வன அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

நாட்டின் மொத்த வனம் மற்றும் மர அடர்த்திப் பரப்பு 8,27,357 சதுர கிலோ மீட்டராக உள்ளது என்றும், இது நாட்டின் புவியியல் பரப்பளவில் 25.17 சதவீதம் என்றும் இன்று(டிச. 21) வெளியிடப்பட்ட இந்திய வன நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாட்டின் புவியியல் பரப்பளவில் 25.17% காடுகள் - புதிய வன அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

டேராடூன்: நாட்டின் மொத்த வனம் மற்றும் மர அடர்த்திப் பரப்பு 8,27,357 சதுர கிலோ மீட்டராக உள்ளது என்றும், இது நாட்டின் புவியியல் பரப்பளவில் 25.17 சதவீதம் என்றும் இன்று (டிச. 21) வெளியிடப்பட்ட இந்திய வன நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் இன்று (21.12.2024) டேராடூனில் உள்ள வன ஆராய்ச்சி நிறுவனத்தில் 'இந்திய வன நிலை அறிக்கை 2023-ஐ (ISFR 2023) வெளியிட்டார். ஐஎஸ்எஃப்ஆர் 1987 முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்திய வன கணக்கெடுப்புப் பணி (எஃப்எஸ்ஐ) மூலம் வெளியிடப்படுகிறது. தொலையுணர்வு செயற்கைக்கோள் தரவு, கள அடிப்படையிலான தேசிய வன நிலை (NFI) ஆகியவற்றின் அடிப்படையில் நாட்டின் வனம், மர வளங்களின் ஆழமான மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுகின்றன. இந்திய வன நிலை அறிக்கை 2023, 18 வது அறிக்கையாகும்.