அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு விசாரணைக்கு தடை கோரிய மனு வாபஸ் பெறப்பட்டதால் அதை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு விசாரணைக்கு தடை கோரிய மனு வாபஸ் பெறப்பட்டதால், அதை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆர்.அரவிந்த் என்பவர் தாக்கல் செய்த மனுவில், “அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தபோது உரிய வழிகாட்டு விதிமுறைகளை கடைபிடிக்கவில்லை. எனவே அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். அதேபோல இந்த வழக்கை விசாரிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு எந்த அதிகாரமும் இல்லை. எனவே வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்,” எனக் கோரியிருந்தார்.