பனகல் பூங்கா - கோடம்பாக்கம் தடத்தில் மார்ச்சுக்குள் தயாராகும் முதல் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரையிலான 4-வது வழித்தடத்தில் தி.நகர் பனகல் பூங்கா - கோடம்பாக்கம் வரையிலான சுரங்கப்பணியில், முதல் சுரங்கப்பாதையை மார்ச் மாதத்துக்குள் தயார் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது

பனகல் பூங்கா - கோடம்பாக்கம் தடத்தில் மார்ச்சுக்குள் தயாராகும் முதல் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரையிலான 4-வது வழித்தடத்தில் தி.நகர் பனகல் பூங்கா - கோடம்பாக்கம் வரையிலான சுரங்கப்பணியில், முதல் சுரங்கப்பாதையை மார்ச் மாதத்துக்குள் தயார் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில் கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரையிலான (26.1 கி.மீ.) 4-வது வழித்தடமும் ஒன்று. இந்த வழித்தடத்தில், கலங்கரை விளக்கம் முதல் கோடம் பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும், பவர் ஹவுஸ் முதல் பூந்தமல்லி வரை உயர்மட்ட பாதையாகவும் அமைக்கப் படுகிறது.