அரசு வழக்கறிஞர்கள் நியமனம் தாமதம் - திமுக வழக்கறிஞர்கள் அதிருப்தி

இந்த 14 மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான வழக்குகள் மதுரை அமர்வில் தாக்கலாகி வருகின்றன. இந்த வழக்குகளில் அரசு சார்பில் ஆஜராக உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் உரிமையியல், குற்றவியல் பிரிவுகளில் 50-க்கும் மேற்பட்ட அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டனர்.

அரசு வழக்கறிஞர்கள் நியமனம் தாமதம் - திமுக வழக்கறிஞர்கள் அதிருப்தி

மதுரை: அரசு வழக்கறிஞர்கள் நியமனம் தாமதமாகி வருவதால் திமுக வழக்கறிஞர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். மதுரையில் அமைந்துள்ள சென்னை உயர் நீதிமன்ற அமர்வில் மதுரை, தேனி, திண்டுக்கல், தஞ்சாவூர், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக் குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 14 மாவட்டங்களை சேர்ந்த வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன. இந்த 14 மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான வழக்குகள் மதுரை அமர்வில் தாக்கலாகி வருகின்றன. இந்த வழக்குகளில் அரசு சார்பில் ஆஜராக உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் உரிமையியல், குற்றவியல் பிரிவுகளில் 50-க்கும் மேற்பட்ட அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில், திறமையின்மை உட்பட பல்வேறு காரணங்களால் 8 அரசு வழக்கறிஞர்கள் நிரந்தரமாக நீக்கப்பட்டனர். 21 அரசு வழக்கறிஞர்களுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படவில்லை. இதனால் அரசு வழக்கறிஞர்களின் எண் ணிக்கை குறைந்தது. அரசு வழக்கறிஞர்கள் காலியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஜூலை மாதம் வழக்கறிஞர்களிடம் இருந்து விண்ணப் பங்கள் பெறப்பட்டன. திமுக வழக்கறிஞர்கள் பலர் அரசு வழக்கறிஞர் பதவிக்கு விண்ணப்பித்தனர். இருப்பினும் விண்ணப்பித்து நூறு நாட்கள் கடந்தும் இன்னும் புதிய அரசு வழக் கறிஞர்கள் நியமிக்கப்படவில்லை.