“ஆட்சி சிறப்பாக உள்ளது என மக்கள் பாராட்ட வேண்டும்” - சீமான் சாடல்
ஆட்சியாளர் தன்னுடைய ஆட்சி சிறப்பாக இருக்கிறது என்று கூறினால், அது கொடுமையாக இருக்கிறது என்று அர்த்தம். மக்கள் சொல்ல வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார் .
திருச்சி: “ஆட்சியாளர் தன்னுடைய ஆட்சி சிறப்பாக இருக்கிறது என்று கூறினால், அது கொடுமையாக இருக்கிறது என்று அர்த்தம். மக்கள் சொல்ல வேண்டும். நாடும், மக்களும், ஏடும் போற்ற வேண்டும். இந்த தலைவனின் ஆட்சி சிறப்பாக இருக்கிறது என்று மக்கள் முதல்வரை பார்க்க வருவதில்லை. வரவழைக்கப்படுகின்றனர்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார் .
திருச்சியில் இன்று (நவ.18) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: தமிழக முதல்வர் தான் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் திராவிட மாடல் ஆட்சி சூப்பர் என்று சொல்வதாக கூறிவருகிறார். என்னுடன் ஒருமுறை வாருங்கள். நானும் ஆய்வுக்குப் போகிறேன். இந்த மனுக்களைக் கொடுத்துவிட்டு, கவலை, கண்ணீரோடு மக்கள் கதறுவதை ஒருமுறை கேளுங்கள்.