இந்த ஆண்டு இறுதிக்குள் 2,500-வது கோயிலிலும் கும்பாபிஷேகம்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்

900 ஆண்டுகள் பழமை வாய்ந்த புரசைவாக்கம் கங்காதரேசுவரர் கோயிலுக்கு 2008-ல் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. தொடர்ந்து, இக்கோயிலில் ரூ.4.82 கோடியில் 36 திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு இறுதிக்குள் 2,500-வது கோயிலிலும் கும்பாபிஷேகம்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்

சென்னை: தமிழகத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் 2,500 கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார்.

சென்னை புரசைவாக்கம் கங்காதரேசுவரர் கோயில் கும்பாபிஷேகம் விழாவுக்கான பந்தக்கால் நடும் விழா நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த புரசைவாக்கம் கங்காதரேசுவரர் கோயிலுக்கு 2008-ல் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. தொடர்ந்து, இக்கோயிலில் ரூ.4.82 கோடியில் 36 திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.