“இனவாதக் கருத்தை முதல்வர் ஸ்டாலின் முன்வைப்பது மலிவானது” - ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்
“ஓர் ஆளுநருக்கு எதிராக முதல்வர் இனவாதக் கருத்தை தவறான குற்றச்சாட்டுகளுடன் முன்வைப்பது துரதிருஷ்டவசமானது, மலிவானது. இது, முதல்வரின் உயர் அரசியலமைப்புப் பதவியின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையிலும் உள்ளது” என ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டமாக தெரிவித்துள்ளார். ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடியதன் சர்ச்சையில் முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய எதிர்வினைக்கு இவ்வாறு அவர் பதில் அளித்துள்ளார்.
சென்னை: “ஓர் ஆளுநருக்கு எதிராக முதல்வர் இனவாதக் கருத்தை தவறான குற்றச்சாட்டுகளுடன் முன்வைப்பது துரதிருஷ்டவசமானது, மலிவானது. இது, முதல்வரின் உயர் அரசியலமைப்புப் பதவியின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையிலும் உள்ளது” என ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டமாக தெரிவித்துள்ளார். ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடியதன் சர்ச்சையில் முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய எதிர்வினைக்கு இவ்வாறு அவர் பதில் அளித்துள்ளார்.
இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள பதிவு: “முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலையில் வெளியிட்ட வருத்தமளிக்கக் கூடிய பதிவு ஒன்றில், எனக்கு எதிராக இனவாத கருத்தைத் தெரிவித்து, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நான் அவமரியாதை இழைத்ததாக பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஒவ்வொரு விழாவிலும் நான் தமிழ்த்தாய் வாழ்த்தை முழுமையாக பாடுவேன் என்பதையும் அதை பக்திச்சிரத்தையோடும், பெருமையோடும், துல்லியமாகவும் பாடுவேன் என்பதும் அவருக்கு நன்றாகத் தெரியும்.