பட்டாசு வெடித்தபோது காயமடைந்த 20 பேருக்கு சிகிச்சை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தீபாவளி பண்டிகை, பட்டாசு வெடிப்புகளால் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருபவர்கள் 20 பேர். இந்த 20 பேரில் 20 சதவிகிதம் தான் அதிகபட்சமான பாதிப்பு என்கிற நிலையில்தான் இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் தீபாவளி பண்டிகை பட்டாசு வெடிப்புகளால் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருபவர்கள் 20 பேர். இந்த 20 பேரில் 20 சதவிகிதம் தீக்காயம் தான் அதிகபட்சமான பாதிப்பு என்கிற நிலையில் இருப்பதாக தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (அக்.31) சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீபாவளி அரசு விடுமுறை நாளில் பணியில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்களை நேரில் சந்தித்து இனிப்புகள் வழங்கி, தேநீர் அருந்தி அவர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் தீபாவளி முன்னெச்சரிக்கை தீக்காய சிறப்பு பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிகளை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.