உலக யானைகள் தினம் | யாங்கோன் உயிரியல் பூங்காவின் 71 வயது யானை! - பார்வையாளர்களின் அனுபவப் பகிர்வு

உலக யானைகள் தினத்தை கொண்டாடும் வகையில், மியான்மரின் யாங்கோன் உயிரியல் பூங்காவில் உள்ள ஆசியாவின் வயதான யானையாக அறியப்படும் மோ மோ பற்றிய பார்வையாளர்கள் பகிர்ந்துள்ள சுவாரஸ்யமான கருத்துகள் இணையவாசிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

உலக யானைகள் தினம் | யாங்கோன் உயிரியல் பூங்காவின் 71 வயது யானை! - பார்வையாளர்களின் அனுபவப் பகிர்வு

புதுடெல்லி: உலக யானைகள் தினத்தை கொண்டாடும் வகையில், மியான்மரின் யாங்கோன் உயிரியல் பூங்காவில் உள்ள ஆசியாவின் வயதான யானையாக அறியப்படும் மோ மோ ( 71 வயது) பற்றி பார்வையாளர்கள் பகிர்ந்துள்ள சுவாரஸ்யமான கருத்துகள் இணையவாசிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளது. யாங்கோன் உயிரியல் பூங்கா மியான்மரில் உள்ள மிகப் பழமையான மற்றும் இரண்டாவது பெரிய பூங்காவாகும்.

2012 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி உலக யானைகள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. உலக யானைகள் தினத்தை கொண்டாடும் வகையில், மியான்மரில் உள்ள யாங்கோன் உயிரியல் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை ஒரு சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. யாங்கோன் உயிரியல் பூங்கா மியான்மரில் உள்ள மிகப் பழமையான மற்றும் இரண்டாவது பெரிய பூங்காவாகும்.