கனமழையால் நிலங்களில் மூழ்கிய காய்கறிகள் - உதகை விவசாயிகள் கவலை

உதகை அருகே எம்.பாலாடா சுற்றுவட்டாரத்தில் பெய்த கனமழைக்கு பல ஏக்கர் மலை காய்கறி தோட்டம் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கனமழையால் நிலங்களில் மூழ்கிய காய்கறிகள் - உதகை விவசாயிகள் கவலை

உதகை: உதகை அருகே எம்.பாலாடா சுற்றுவட்டாரத்தில் பெய்த கனமழைக்கு பல ஏக்கர் மலை காய்கறி தோட்டம் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

வடகிழக்கு பருவ மழை எதிரொலியாக நீலகிரி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. அவ்வப்போது கன மழையும் பெய்து வருகிறது. மழையால் காலநிலையில் ஏற்பட்ட மாற்றத்தால் கடுங்குளிர் நிலவுகிறது. காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மாவட்டத்தில் ஆங்காங்கே இடியுடன் கனமழை பெய்தது. உதகை அருகே எம்.பாலாடா, கப்பத்தொரை, கல்லக்கொரை ஹாடா பகுதிகளில் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது.