வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வுப் பகுதி; அக்.17-ல் சென்னை அருகே கரையை கடக்கும்: வானிலை ஆய்வு மையம்
வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது என்றும் இது வரும் அக்.17ஆம் தேதி அதிகாலை சென்னை அருகே கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது என்றும் இது வரும் அக்.17ஆம் தேதி அதிகாலை சென்னை அருகே கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ”தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கே சுமார் 490 கி.மீ தொலைவில் இது நிலைகொண்டுள்ளது. இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து புதுவைக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகில் வரும் அக்.17ஆம் தேதி அதிகாலை நேரத்தில் கரையை கடக்கும்.