காவலரின் மரணம் குறித்து விசாரணை: பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்
இந்நிலையில் அவரது மரணம் மர்மமான முறையில் ஏற்பட்டதாகவும், அதுகுறித்து உண்மை நிலையைக் கண்டறிய வேண்டும் எனவும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்
சென்னை: தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில், சுப்புலாபுரத்தைச் சேர்ந்தவர் செல்வமுருகன்(29). இவர் சென்னை புதுப்பேட்டையில் ஆயுதப்படை காவலராகப் பணியாற்றிவந்த நிலையில், கடந்த 18-ம் தேதி காவலர் குடியிருப்பில் உள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீர் நிரம்பிவிட்டதா? என்பதைப் பார்ப்பதற்காக மாடிக்கு சென்றுள்ளார்.
அப்போது 14-வது மாடியில் இருந்து கிழே விழுந்து உயிரிழந்தார். அவர் கால் தவறி விழுந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.இந்நிலையில் அவரது மரணம் மர்மமான முறையில் ஏற்பட்டதாகவும், அதுகுறித்து உண்மை நிலையைக் கண்டறிய வேண்டும் எனவும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.