கரூர் வீரராக்கியம் பகுதி குடியிருப்புகளை சூழ்ந்த மழை வெள்ளத்தால் மக்கள் அவதி
கரூர் மாவட்டத்தில் நேற்றிரவு மற்றும் இன்று (டிச. 21-ம் தேதி) அதிகாலை பெய்த கனமழையால் வீரராக்கியத்தில் உள்ள குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்தது.
கரூர்: கரூர் மாவட்டத்தில் நேற்றிரவு மற்றும் இன்று (டிச.21-ம் தேதி) அதிகாலை பெய்த கனமழையால் வீரராக்கியத்தில் உள்ள குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்தது.
கரூர் மாவட்டத்தில் மாயனூர், கிருஷ்ணராயபுரம், மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்றிரவு மற்றும் இன்று (டிச. 21ம் தேதி) அதிகாலை 1 மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்தது. இதனால் வீரரராக்கியம் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட கடை, வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்து வீடுகளை சூழ்ந்து நின்றது. இதனால் அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல அவதிப்பட்டனர்.