காற்றழுத்த தாழ்வு பகுதி அந்தமானில் உருவானது: 9 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

அந்தமான் கடல் பகுதியில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது

காற்றழுத்த தாழ்வு பகுதி அந்தமானில் உருவானது: 9 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

சென்னை: அந்தமான் கடல் பகுதியில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது புயலாக வலுப்பெற்று 24-ம் தேதி ஒடிசா - மேற்கு வங்க கடற்கரையை நெருங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டல சுழற்சி காரணமாக 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (அக்.22) மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நாளை (அக்.23) புயலாக வலுப்பெறக்கூடும். அதன்பிறகு, வடமேற்கு திசையில் நகர்ந்து, ஒடிசா - மேற்கு வங்க கடற்கரையை 24-ம் தேதி நெருங்கும்.