‘சங்கீத கலாநிதி’ விருதை எம்.எஸ்​.சுப்பு​லட்​சுமி பெயரில் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்க தடை

இந்தாண்​டுக்கான ‘சங்கீத கலாநிதி’ விருதை எம்.எஸ்​.சுப்பு​லட்​சுமி​யின் பெயரில் பாடகர் டி.எம். கிருஷ்ணாவுக்கு வழங்​கக்​கூடாது என தடை விதித்​துள்ள உயர் நீதி​மன்​றம், எம்.எஸ்​.சுப்பு​லட்​சுமி​யின் பெயரைப் பயன்​படுத்​தாமல் அவருக்கு விருது வழங்​கலாம் எனவும் உத்தர​விட்​டுள்​ளது.

‘சங்கீத கலாநிதி’ விருதை எம்.எஸ்​.சுப்பு​லட்​சுமி பெயரில் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்க தடை

சென்னை: இந்தாண்​டுக்கான ‘சங்கீத கலாநிதி’ விருதை எம்.எஸ்​.சுப்பு​லட்​சுமி​யின் பெயரில் பாடகர் டி.எம். கிருஷ்ணாவுக்கு வழங்​கக்​கூடாது என தடை விதித்​துள்ள உயர் நீதி​மன்​றம், எம்.எஸ்​.சுப்பு​லட்​சுமி​யின் பெயரைப் பயன்​படுத்​தாமல் அவருக்கு விருது வழங்​கலாம் எனவும் உத்தர​விட்​டுள்​ளது. மறைந்த கர்நாடக இசை பாடகியான எம்.எஸ்​.சுப்பு​லட்​சுமி​யின் பேரன் ஸ்ரீனிவாசன், சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தொடர்ந்​திருந்த சிவில் வழக்​கில், “கடந்த 2004-ம் ஆண்டு எனது பாட்​டி​யின் மறைவுக்​குப்​பிறகு மியூசிக் அகாடமி அவரது நினை​வைப் போற்றி கவுரவிக்​கும் வகையில் அவருடைய பெயரில் ‘சங்கீத கலாநிதி எம்.எஸ்​.சுப்பு​லட்​சுமி’ என்ற விருதை ‘தி இந்து’ குழு​மத்​துடன் இணைந்து வழங்கி வருகிறது.

அதன்படி மியூசிக் அகாட​மி​யின் வருடாந்திர இசை கச்சேரிக்கான சீசனின்​போது ஒவ்வொரு ஆண்டும் கர்நாடக இசை உலகுக்கு சிறந்த பங்களிப்பை அளித்து வரும் பாடகர்​களுக்கு ‘சங்கீத கலாநிதி எம்.எஸ்​. சுப்பு​லெட்​சுமி’ விருது வழங்​கப்​படு​கிறது. அதன்படி வரும் டிசம்​பரில் நடைபெறவுள்ள மியூசிக் அகாட​மி​யின் 98-வது ஆண்டு விழா​வில் பாடகர் டி.எம்​.கிருஷ்ணாவுக்கு எனது பாட்டி எம்.எஸ்​.சுப்பு​லட்​சுமி​யின் பெயரில் இந்த விருது வழங்​கப்​படு​வதாக அறிவிக்​கப்​பட்டு இருப்பது அதிர்ச்​சியை ஏற்படுத்​தி​யுள்​ளது.