சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே மின்சார ரயில் சேவை நாளை ரத்து

தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தாம்பரம் யார்டில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், சென்னை கடற்கரை - தாம்பரம் வழித் தடத்தில் நாளை (17-ம் தேதி) காலை 7 முதல் மாலை 5 மணி வரை மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன.

சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே மின்சார ரயில் சேவை நாளை ரத்து

சென்னை: தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தாம்பரம் யார்டில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், சென்னை கடற்கரை - தாம்பரம் வழித் தடத்தில் நாளை (17-ம் தேதி) காலை 7 முதல் மாலை 5 மணி வரை மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன.

எனினும், பயணிகளின் வசதிக்காக அரைமணி முதல் ஒரு மணி நேர இடைவெளியில் காலை 6.15 மணி முதல் மாலை 4.10 வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். அதே நேரத்தில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர் மற்றும் அரக்கோணம் ஆகிய இடங்களுக்கு இயக்கப்படும் ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.