‘போலீஸ் தடுத்தாலும் தடையை மீறி மாமல்லபுரத்தில் சித்திரை திருவிழா’ - வன்னியர் சங்கம் உறுதி
போலீஸார் தடுத்தாலும் தடையை மீறி மகாபலிபுரத்தில் சித்திரை திருவிழா நடைபெறும் என்று வன்னியர் சங்கத் தலைவர் அருள் மொழி அறிவித்துள்ளார். பாமக, வன்னியர் சங்கம், உழவர் பேரியக்கம் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் தவளக்குப்பத்தில் நடந்தது
புதுச்சேரி: “போலீஸார் தடுத்தாலும் தடையை மீறி மாமல்லபுரத்தில் சித்திரைத் திருவிழா நடைபெறும்” என்று வன்னியர் சங்கத் தலைவர் அருள்மொழி அறிவித்துள்ளார்.
பாமக, வன்னியர் சங்கம், உழவர் பேரியக்கம் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் தவளக்குப்பத்தில் நடந்தது. கூட்டத்துக்கு பாமக மாநில அமைப்பாளர் கணபதி தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மாமல்லபுரத்தில் நடைபெறும் பாமக சித்திரைத் திருவிழா குறித்து ஆலோசிக்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி பேசியது: "புதுச்சேரியில் முதல்வர் வீட்டு வாசலில் கொலை நடக்கிறது. மாதம்தோறும் கொலை நடக்கும் பகுதியாக புதுச்சேரி உள்ளது. இதற்கு சளைக்காமல் தமிழ்நாடு வந்துவிட்டது. தமிழகத்தில் கொலை சாதாரணமாகிவிட்டது.