’புஷ்பா 2’ 2-வது சிங்கிள் ‘பீலிங்ஸ்’ எப்படி? - அல்லு அர்ஜுன், ராஷ்மிகாவின் வித்தியாச நடனம்!
அல்லு அர்ஜுன் நடித்துள்ள ‘புஷ்பா 2’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘பீலிங்ஸ்’ பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.
ஹைதராபாத்: அல்லு அர்ஜுன் நடித்துள்ள ‘புஷ்பா 2’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘பீலிங்ஸ்’ பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்துள்ள படம் ‘புஷ்பா 2: தி ரூல்’. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். தமன் பின்னணி இசை அமைக்கிறார். இதன் முதல் பாகம் பெற்ற வரவேற்பால் இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இப்படம் வரும் டிச.5 திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.