“சென்னை, கோவையில் இல்லாத அளவுக்கு மதுரையில் அநியாய வரி விதிப்பு” - துணை மேயர் கொந்தளிப்பு

“சென்னை, கோவையில் இல்லாத அளவுக்கு மதுரையில் அநியாய வரி விதிக்கப்பட்டுள்ளது. வரி பாக்கியை வைத்திருப்பவர்களிடம் வசூல் செய்யாமல் முறையாக கட்டுபவர்களுக்கு ஆண்டுதோறும் 6 சதவீதம் வரியை உயர்த்துவது நியாயமில்லை” என்று மதுரை துணை மேயர் நாகராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

“சென்னை, கோவையில் இல்லாத அளவுக்கு மதுரையில் அநியாய வரி விதிப்பு” - துணை மேயர் கொந்தளிப்பு

மதுரை: “சென்னை, கோவையில் இல்லாத அளவுக்கு மதுரையில் அநியாய வரி விதிக்கப்பட்டுள்ளது. வரி பாக்கியை வைத்திருப்பவர்களிடம் வசூல் செய்யாமல் முறையாக கட்டுபவர்களுக்கு ஆண்டுதோறும் 6 சதவீதம் வரியை உயர்த்துவது நியாயமில்லை” என்று மதுரை துணை மேயர் நாகராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

மதுரையில் ஏற்கெனவே சிபிஎம் எம்பி-யான சு.வெங்கடேசனுக்கும், வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்திக்கும் இடையே மோதல் ஏற்பட்டு திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினையே இன்னும் அடங்காத நிலையில், மதுரை மாநகராட்சியின் சிபிஎம் கட்சியின் துணை மேயர் நாகராஜன், மாநகராட்சிக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.