சென்னை ஜி.பி.சாலையில் குப்பை மேடாக காட்சியளிக்கும் டிரான்ஸ்பார்மர்கள்: மக்கள் அச்சம்
ஏதேனும் அசம்பாவிதம் நிகழும் முன்பாக அதிகாரிகள் குப்பைகளை அகற்றி, டிரான்பார்மர்களுக்கு பாதுகாப்பு தடுப்பு அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சென்னை ஜி.பி.சாலையில் டிரான்ஸ்பார்மர்களின் அடியில் குப்பைகளும், தேவையற்ற வயர்களும் குவிந்து கிடக்கின்றன. ஏதேனும் அசம்பாவிதம் நிகழும் முன்பாக அதிகாரிகள் குப்பைகளை அகற்றி, டிரான்பார்மர்களுக்கு பாதுகாப்பு தடுப்பு அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சென்னையில் இரு சக்கர வாகனங்களின் உதிரி பாகங்கள் விற்பனைக்கு பெயர்போனது புதுப்பேட்டை. அதேபோல கார் மற்றும் மற்ற இதர 4 சக்கர வாகனங்களின் உதிரி பாகங்கள் விற்பனைக்கு ஜி.பி.சாலை பெயர்பெற்றது. அண்ணாசாலையில் இருந்து ராயப்பேட்டை நோக்கி செல்லும் வழியில் அமைந்துள்ள ஜி.பி சாலையில் ஏராளமான வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் அமைந்துள்ளதால் தினந்தோறும் பரபரப்பாகவே காணப்படுகிறது. நெரிசல் மிகுந்த ஜி.பி.சாலையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.