சென்னை டிபிஐ வளாகத்தில் ஜெராக்ஸ் வசதி இல்லை: மக்கள் வேதனை

கல்வித்துறை அலுவலகங்கள் உட்பட பல்வேறு அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள சென்னை டிபிஐ வளாகத்தில் ஜெராக்ஸ் வசதி இல்லாமல் பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். அவர்கள் ஜெராக்ஸ் எடுப்பதற்காக நீண்ட தொலைவு செல்ல வேண்டியுள்ளது.

சென்னை டிபிஐ வளாகத்தில் ஜெராக்ஸ் வசதி இல்லை: மக்கள் வேதனை

கல்வித்துறை அலுவலகங்கள் உட்பட பல்வேறு அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள சென்னை டிபிஐ வளாகத்தில் ஜெராக்ஸ் வசதி இல்லாமல் பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். அவர்கள் ஜெராக்ஸ் எடுப்பதற்காக நீண்ட தொலைவு செல்ல வேண்டியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் அமைந்துள்ளது டிபிஐ வளாகம். தற்போது பேராசிரியர் அன்பழகன் வளாகம் என அழைக்கப்படுகிறது.

இங்கு பள்ளிக்கல்வி இயக்குநர் அலுவலகம், அரசு தேர்வுகள் இயக்குநர் அலுவலகம், தொடக்கக்கல்வி இயக்குநர் அலுவலகம், ஆசிரியர் தேர்வு வாரியம், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி பணிகள் கழகம், மாநில ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர், முறைசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநர் அலுவலகம், தனியார் பள்ளிகள் இயக்குநர் அலுவலகம், தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் என கல்வித்துறை தொடர்புடைய அனைத்து தலைமை அலுவலகங்களும், தென்மண்டல சிபிஐ அலுவலகம், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், மத்திய வெளியுறவுத்துறை கிளை செயலகம், தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அலுவலகம் உள்ளிட்ட இதர மத்திய-மாநில அரசு அலுவலகங்களும் இயங்கி வருகின்றன.