சென்னை தொலைக்காட்சியில் இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவை ரத்து செய்க: ராமதாஸ்

சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் இன்று (அக்.18) நடைபெறவுள்ள இரு விழாக்களில்  இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழாவை ரத்து செய்ய வேண்டும் என பாமக நிறுவனர்  ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். 

சென்னை தொலைக்காட்சியில் இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவை ரத்து செய்க: ராமதாஸ்

சென்னை: சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் இன்று (அக்.18) நடைபெறவுள்ள இரு விழாக்களில் இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழாவை ரத்து செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சென்னையில் உள்ள தூர்தர்ஷன் தமிழ் எனப்படும் சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழாவும், சென்னை தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்களும் இன்று மாலை நடைபெறும் என்றும், அந்நிகழ்ச்சிகளில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அப்பட்டமான இந்த இந்தித் திணிப்பு முயற்சி கடுமையாக கண்டிக்கத்தக்கது.