தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் திடீர் பணியிடை நீக்கம்
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் வி.திருவள்ளுவனை பணியிடை நீக்கம் செய்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் வி.திருவள்ளுவனை பணியிடை நீக்கம் செய்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மொழியியல் உயர்படிப்பு மையத்தின் பேராசிரியராகப் பணியாற்றி வந்த வி.திருவள்ளுவன், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக 2021 டிசம்பர் 13-ம் தேதி பொறுப்பேற்றார். இவரது பதவிக் காலம் வரும் டிசம்பர் 12-ம் தேதியுடன் நிறைவடைய இருந்தது.