புதுச்சேரியில் விவசாயக் கடன் ரூ.11.61 கோடியை தள்ளுபடி செய்து அரசாணை
புதுச்சேரியில் கூட்டுறவு விவசாய கடன் சங்கங்களில் 1,579 விவசாயிகள் பெற்றிருந்த விவசாயக் கடன் ரூ.11.61 கோடி தள்ளுபடி செய்யப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது
புதுச்சேரி: புதுச்சேரியில் கூட்டுறவு விவசாய கடன் சங்கங்களில் 1,579 விவசாயிகள் பெற்றிருந்த விவசாயக் கடன் ரூ.11.61 கோடி தள்ளுபடி செய்யப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவையில் கடந்த 2021-22 பட்ஜெட் கூட்டத் தொடரில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் செயல்படும் பிரதம கூட்டுறவு விவசாய கடன் சங்கங்களில் விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்த நடவடிக்கைகளுக்காக விவசாய உறுப்பினர்கள் பெற்று மார்ச் மாதம் 31ம் தேதி 2022 ஆண்டு வரையிலான காலத்திற்கு திருப்பிச் செலுத்தப்படாமல் உள்ள அசல் வட்டி மற்றும் அபராத வட்டி அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.