சேலத்தில் ரூ.7 கோடி மதிப்பில் விளையாட்டு விடுதி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தகவல்
விளையாட்டு வீரர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, ரூ.7 கோடியில் 60 வீரர்கள் தங்கிப் பயிற்சி பெறும் வகையிலான விளையாட்டு விடுதி சேலத்தில் அமைக்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
சேலம்: விளையாட்டு வீரர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, ரூ.7 கோடியில் 60 வீரர்கள் தங்கிப் பயிற்சி பெறும் வகையிலான விளையாட்டு விடுதி சேலத்தில் அமைக்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள 707 ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பல்வேறு துறைகள் சார்பில் 3,583 பயனாளிகளுக்கு ரூ.33.26 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சேலத்தில் நேற்று நடந்தது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், விளையாட்டு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசியதாவது: