வாடகை இருசக்கர வாகன பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு செய்ய குழு: அமைச்சர் சிவசங்கர் தகவல்
வாடகை இருசக்கர வாகனங்களின் பயணப் பாதுகாப்பு தொடர்பாக குழு அமைத்து ஆய்வு செய்யப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறினார்.
அரியலூர்: வாடகை இருசக்கர வாகனங்களின் பயணப் பாதுகாப்பு தொடர்பாக குழு அமைத்து ஆய்வு செய்யப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறினார்.
அரியலூர் மாவட்டம் செந்துறையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: நாடு முழுவதும் வாடகை இருசக்கர வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் கல்லூரி மாணவர்கள் உட்பட பலரும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சேவை தொடர வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால், சமூகஆர்வலர்களோ, இதில் பாதுகாப்பான பயணம் இல்லை என்று விமர்சிக்கின்றனர்.