‘தவெக தலைவர் விஜய்யின் அதிகாரப்பகிர்வு கருத்தை வரவேற்கிறோம்’ - செல்வப்பெருந்தகை
தவெக தலைவர் விஜய்யின் அதிகாரப்பகிர்வு கருத்தை வரவேற்கிறோம். இப்போது இண்டியா கூட்டணியில் இருக்கிறோம். இண்டியா கூட்டணியில் எந்த சலனமும், சங்கடமும் இல்லை, என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
சென்னை: “தவெக தலைவர் விஜய்யின் அதிகாரப்பகிர்வு கருத்தை வரவேற்கிறோம். இப்போது இண்டியா கூட்டணியில் இருக்கிறோம். இண்டியா கூட்டணியில் எந்த சலனமும், சங்கடமும் இல்லை,” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வபெருந்தகை இன்று (நவ.1) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: இன்று (நவ.1) மாலை முதல் நாளை மறுநாள் வரை வயநாட்டில் பிரியங்கா காந்தியை ஆதரித்து தமிழக காங்கிரஸ் சார்பில் வாக்கு சேகரிக்க உள்ளோம். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்புகளை வலுப்படுத்த வரும் நவ 5 -ம் தேதி முதல் கிராம கமிட்டிகள் சீரமைப்பு பணிகள் தொடங்கும்.