“புதுச்சேரி பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்கிறது” - விடுதலை நாள் விழாவில் முதல்வர் பேச்சு
புதுச்சேரி விடுதலை நாள் விழா இன்று கடற்கரை சாலை காந்தி திடலில் கொண்டாடப்பட்டது. முதல்வர் ரங்கசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
புதுச்சேரி: புதுச்சேரி விடுதலை நாள் விழா இன்று (நவ.1) கடற்கரை சாலை காந்தி திடலில் கொண்டாடப்பட்டது. முதல்வர் ரங்கசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். கொட்டும் மழையில் நடந்து சென்று போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
தொடர்ந்து அவர் விடுதலை நாள் உரையாற்றி பேசியதாவது: “புதுச்சேரி மாநிலத்தில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் அனைத்தும் உடனடியாக பயனாளிகளைச் சென்றடைகின்றன. அந்த வகையில் புதுச்சேரி மாநிலம் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது என்பதை பெருமையோடு குறிப்பிடுகிறேன்.