தவெக மாநாட்டு திடலில் அரசின் அனுமதி இல்லாமல் பனங்கன்றுகள் வெட்டப்பட்டதால் சர்ச்சை
விக்கிரவாண்டி அருகே வி.சாலையில், தமிழக வெற்றிக் கழக மாநாடு நடைபெறவுள்ள திடலின் அருகில் இருந்த பனங்கன்றுகள் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல் வெட்டப்பட்டுள்ளது.
விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகே வி.சாலையில், தமிழக வெற்றிக் கழக மாநாடு நடைபெறவுள்ள திடலின் அருகில் இருந்த ஒரு வயதுடைய 8 பனங்கன்றுகள் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல் வெட்டப்பட்டுள்ளது. பனங்கன்றுகளை வெட்ட ஆட்சியரின் அனுமதியை பெற வேண்டும் என அரசின் உத்தரவு உள்ள நிலையில், அதற்கான எந்தவித அனுமதியும் இல்லாமல் பனங்கன்றுகள் வெட்டப்பட்டது சர்ச்சையாகி உள்ளது.
விக்கிரவாண்டி அருகே வி.சாலையில், தமிழக வெற்றிக் கழக மாநாடு வரும் 27-ம் தேதி நடைபெறவுள்ளது. மாநாடு நடைபெறும் 85 ஏக்கர் பரப்பளவு முழுவதும் 937 கம்பங்கள் நடப்பட்டுள்ளது. ஒவ்வென்றிலும் 16 விளக்குகள் வீதம் 14 ஆயிரத்து 992 விளக்குகள் பொருத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. மாநாட்டு மேடை 60 அடி அகலம், 170 அடி நீளத்தில் அமைக்கப்பட்டுள்ளது.