திரை விமர்சனம் - எமக்குத் தொழில் ரொமான்ஸ்

சென்னையில் சினிமா உதவி இயக்குநராக இருக்கிறார் உமாசங்கர் (அசோக் செல்வன்). மருத்துவமனையில் செவிலியாராக இருக்கும் லியோவை (அவந்திகா மிஸ்ரா) கண்டதும் காதல் கொள்கிறார்.

திரை விமர்சனம் - எமக்குத் தொழில் ரொமான்ஸ்

சென்னையில் சினிமா உதவி இயக்குநராக இருக்கிறார் உமாசங்கர் (அசோக் செல்வன்). மருத்துவமனையில் செவிலியாராக இருக்கும் லியோவை (அவந்திகா மிஸ்ரா) கண்டதும் காதல் கொள்கிறார். தன்னுடைய தோழிக்கு உதவி செய்ய போய், தன் காதலுக்குச் சிக்கலை ஏற்படுத்திக் கொள்கிறார். அவருடைய காதலைச் சேர்த்து வைக்க ஒரு புறம் நண்பர்கள், இன்னொருபுறம் குடும்பத்தினர் என களமிறங்குகிறார்கள். இந்த முயற்சி ‘சுபம்’ ஆனதா, இல்லையா என்பதே கதை.

பார்த்துப் பழகிய காதல் கதைதான் என்றாலும் அதற்கு நகைச்சுவை முலாம் பூசி படமாக்கி இருக்கிறார் இயக்குநர் பாலாஜி கேசவன். ஒரு பொய், அதை மறைக்க இன்னொரு பொய் என பொய் மூட்டைகள் சேரும் போது கடைசியில் என்ன நடக்கும் என்பதைத் திரைக்கதையாக்கி இருக்கிறார்கள். ஆனால், அந்தக் காட்சிகள் ஒரு கட்டத்தில் மிகையாகி சோர்வை ஏற்படுத்தி விடுகின்றன.