திரை விமர்சனம் - நிறங்கள் மூன்று
பள்ளி ஆசிரியர் வசந்தின் (ரகுமான்) மகள் பார்வதி (அம்மு அபிராமி), காணாமல் போகிறார்.
பள்ளி ஆசிரியர் வசந்தின் (ரகுமான்) மகள் பார்வதி (அம்மு அபிராமி), காணாமல் போகிறார். வசந்தும் பார்வதியை ஒருதலையாகக் காதலிக்கும் ஸ்ரீயும் (துஷ்யந்த்) அவரைத் தேடுகிறார்கள். இதற்கிடையே இயக்குநராகும் கனவில் இருக்கும் வெற்றி (அதர்வா), தனது கதையைத் திருடி முன்னணி இயக்குநர் (ஜான் விஜய்) படம் இயக்குவதைத் தெரிந்துகொள்கிறார். அது தனது கதை என்பதை நிரூபிக்கத் தேவையான ‘ஸ்க்ரிப்ட் காப்பி’ தொலைந்துவிடுகிறது.
வெற்றியின் தந்தையும் காவல்துறை அதிகாரியுமான செல்வம் (சரத்குமார்) அமைச்சரின் (சந்தான பாரதி) மகன்களைக் கைது செய்வதால் சிக்கல்களை எதிர்கொள்கிறார். பார்வதிக்கு என்ன ஆனது? வெற்றியின் ஸ்க்ரிப்ட் கிடைத்ததா? இந்தக் கதாபாத்திரங்களுக்கு என்ன தொடர்பு? என்கிற கேள்விகளுக்கு விடை சொல்கிறது மீதிக் கதை.