தீபாவளி: வடலூர் ஆட்டுச் சந்தையில் ரூ.1.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை

கடலூரில் இன்று நடைபெற்ற வடலூர் ஆட்டுச் சந்தையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.1.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதால் கால்நடை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தீபாவளி: வடலூர் ஆட்டுச் சந்தையில் ரூ.1.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை

கடலூர்: கடலூரில் இன்று நடைபெற்ற வடலூர் ஆட்டுச் சந்தையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.1.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதால் கால்நடை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் வடலூரில் வாரந்தோறும் சனிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த ஆட்டுச் சந்தைக்கு வடலூர் அதன் சுற்றுவட்டார பகுதியான குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி, தம்பிப்பேட்டை, அரசகுழி, பண்ருட்டி, காடாம்புலியூர், கொள்ளுக்காரன்குட்டை, வடக்குத்து, மீன்சுருட்டி, மருவாய், கொலக்குடி, கம்மாபுரம், சேத்தியாத்தோப்பு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் வளர்த்து வரும் ஆடுகளை விற்பனைக்கு கொண்டுவருது வழக்கம்.