“நான் வாழும் தியாகி!” - பாலியல் வழக்கில் போலீஸிடம் நடிகர் ஜெயசூர்யா விவரிப்பு
தன் மீது பொய்யான வழக்கு புனையப்பட்டுள்ளதாகவும், தான் ஒரு வாழும் தியாகி என்றும் மலையாள நடிகர் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்: தன் மீது பொய்யான வழக்கு புனையப்பட்டுள்ளதாகவும், தான் ஒரு வாழும் தியாகி என்றும் மலையாள நடிகர் ஜெயசூர்யா பாலியல் புகார் தொடர்பான விசாரணையின்போது காவல் துறையிடம் தெரிவித்துள்ளார்.
கேரளாவின் ஆலுவாவைச் சேர்ந்த பெண் ஒருவர் நடிகர் ஜெயசூர்யா மீது பாலியல் புகார் அளித்தார். இதையடுத்து அவர் மீது திருவனந்தபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக செவ்வாய்கிழமை காலை 10 மணிக்கு திருவனந்தபுரம் கன்டோன்மென்ட் காவல்நிலையத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி நடிகர் ஜெயசூர்யாவுக்கு காவல் துறையினர் சம்மன் அனுப்பினர்.