நெல்லை மாவட்டத்தில் 3 நாள் கனமழையில் 5,768 ஹெக்டேரில் பயிர் பாதிப்பு
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 12,13,14-ம் தேதிகளில் பெய்த கன மழையால், 5,768 ஹெக்டேரில் பயிர்கள் பாதிப்படைந்துள்ளதாக வேளாண்மைத் துறை கணக்கிட்டுள்ளது.
நெல்லை: திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 12,13,14-ம் தேதிகளில் பெய்த கன மழையால், 5,768 ஹெக்டேரில் பயிர்கள் பாதிப்படைந்துள்ளதாக வேளாண்மைத் துறை கணக்கிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் நடப்பு டிசம்பர் மாதத்தில் கடந்த 17-ம் தேதி வரை 290.10 மி.மீ மழை பெய்துள்ளது. இது டிசம்பர் மாத வளமையான மழையளவான 116.60 மி.மீ-ஐ விட 148 சதவீதம் அதிகமாகும். இதுபோல், கடந்த நவம்பர் மாதத்தில் 177.70 மி.மீ மழை பெய்துள்ளது. இது வளமையான மழையளவான 208.20 மி.மீ-ஐ விட 14.64 சதவீதம் குறைவாகும்.