பாஷாவின் இறுதி ஊர்வலத்தை அனுமதித்தது தவறான முன்னுதாரணம்: வானதி சீனிவாசன் கண்டனம்
கோவை குண்டுவெடிப்பு குற்றவாளி பாஷாவின் இறுதி ஊர்வலத்திற்கு அனுமதி அளித்து தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது திமுக அரசு என, பாஜக தேசிய மகளிரணி தலைவர் மற்றும் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ, வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவை: கோவை குண்டுவெடிப்பு குற்றவாளி பாஷாவின் இறுதி ஊர்வலத்திற்கு அனுமதி அளித்து தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது திமுக அரசு என, பாஜக தேசிய மகளிரணி தலைவர் மற்றும் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ, வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு நடைபெற்ற குண்டுவெடிப்பு தமிழக வரலாற்றின் ஓர் கருப்பு நாள். அமைதியாக இருந்த கோவையை ரத்த களறியாக்கியதால், கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்தின் பொருளாதார வளர்ச்சியே தடைபட்டது.