பாம்பன் புதிய ரயில் பாலத்தில் குறைபாடுகள் - பரிந்துரைகள் என்னென்ன?

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் சமீபத்தில் ஆய்வு மேற்கொண்ட ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி தனது அறிக்கையில் பல்வேறு குறைபாடுகளை சுட்டிக்காட்டி, சில பரிந்துரைகளை வழங்கியுள்ளார்

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் குறைபாடுகள் - பரிந்துரைகள் என்னென்ன?

குமரி: பாம்பன் புதிய ரயில் பாலத்தில் சமீபத்தில் ஆய்வு மேற்கொண்ட ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி தனது அறிக்கையில் பல்வேறு குறைபாடுகளை சுட்டிக்காட்டி, சில பரிந்துரைகளை வழங்கியுள்ளார்.

பாம்பன் கடலில் புதிய ரயில் பாலம் கட்டுமானப் பணிகள் அண்மையில் முடிவடைந்தது. இந்த ரயில் பாலத்தை கடந்த நவம்பர் 13, 14ம் தேதிகளில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி ஆய்வு செய்தார். இதுதொடர்பாக அவர் இந்திய ரயில்வே வாரியத்தின் செயலருக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையில், ”புதிய பாலத்தை திட்டமிடுவதற்கு முன்பு ரயில்வே வாரியம் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவை அமைக்க வேண்டும். ஆனால், பாம்பன் புதிய ரயில் பாலத்தில் அந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை. இந்தப் பாலத்தில் அரிப்பு, துருப்பிடித்தல் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.