புதுச்சேரியில் மின்துறை தனியார் மயம் ஏன்? - அமைச்சர் விளக்கம்
“மின்துறை தனியார் மயம் முடிவு எதற்கென்றால், நல்ல சேவையை மக்களுக்கு கொடுக்க வேண்டும். எந்த தடை ஏற்பட்டாலும் உடனுக்குடன் சரி செய்ய வேண்டும். அதற்கு நிறைய பணம் தேவைப்படுகிறது. அதனை அரசால் கொடுக்க முடியாது” என்று புதுச்சேரி உள்துறை மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார்.
புதுச்சேரி: “மின்துறை தனியார் மயம் முடிவு எதற்கென்றால், நல்ல சேவையை மக்களுக்கு கொடுக்க வேண்டும், எந்த தடை ஏற்பட்டாலும் உடனுக்குடன் சரி செய்ய வேண்டும், அதற்கு நிறைய பணம் தேவைப்படுகிறது. அதனை அரசால் கொடுக்க முடியாது” என்று புதுச்சேரி உள்துறை மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: ''புதுச்சேரி பல்கலைக்கழத்தில் உள்ளூர் மாணவர்களுக்கு 25 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம். இரு தினங்களுக்கு முன்பு கூட மத்திய அமைச்சரை சந்தித்தபோது இந்த கோரிக்கையை வலியுறுத்தியுள்ளோம். அதற்குரிய நடவடிக்கையை எடுப்பதாக கூறியுள்ளார். அதனை வலியுறுத்தி விரைவில் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.