“மஞ்சக்கொல்லை சம்பவத்தை பிரச்சினையாக மடைமாற்ற பாமக முயற்சி” - திருமாவளவன்
“கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த மஞ்சக்கொல்லை கிராமத்தில் பாமக மற்றும் விசிக கொடிக்கம்ப பீடங்கள் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பான பிரச்சினையை இரு சமூகத்தினர் இடையேயான பிரச்சினையாக மடைமாற்ற பாமகவினர் முயற்சிக்கின்றனர்,” என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
புவனகிரி: “கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த மஞ்சக்கொல்லை கிராமத்தில் பாமக மற்றும் விசிக கொடிக்கம்ப பீடங்கள் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பான பிரச்சினையை இரு சமூகத்தினர் இடையேயான பிரச்சினையாக மடைமாற்ற பாமகவினர் முயற்சிக்கின்றனர்,” என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
இது குறித்து தொல்.திருமாவளவன் கூறியது: “புவனகிரியை அடுத்த மஞ்சக்கொல்லை கிராமத்தில் கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி விசிக கொடி கம்பம் அகற்றப்பட்டது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் பேச்சுவார்த்தை நடத்தி வழக்குப் பதிவை தவிர்த்தனர். இந்த நிலையில் மீண்டும் அக்டோபர் 15-ம் தேதி கொடிக்கம்பம் அகற்றப்பட்டது. அதன் மீது புகார் அளித்தபோது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.