“முதல்வர் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் தான் காவல் துறை இருக்கிறதா?” - மார்க்சிஸ்ட் சந்தேகம்

தமிழக முதல்வரின் கட்டுப்பாட்டில் காவல்துறை இருக்கிறதா, இல்லையா என்ற சந்தேகம் இருக்கிறது என மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மதுரையில் இன்று தெரிவித்தார்.

“முதல்வர் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் தான் காவல் துறை இருக்கிறதா?” - மார்க்சிஸ்ட் சந்தேகம்

மதுரை: “தமிழக முதல்வரின் கட்டுப்பாட்டில் காவல் துறை இருக்கிறதா, இல்லையா என்ற சந்தேகம் இருக்கிறது” என மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 107-வது ஆண்டு நவம்பர் புரட்சி தினத்தை முன்னிட்டு முனிச்சாலை புதுராமநாதபுரம் சிமெண்ட் சாலையில் தெற்கு பகுதிக்குழு அலுவலகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார். இதில் மதுரை எம்பி சு.வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியது: “வரவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல், வக்பு வாரிய சட்டத் திருத்தம் செய்ய மோடி அரசாங்கம் முயற்சிக்கிறது. குடியுரிமை சட்டத்தையும் அமலாக்கியே தீருவோம் என மோடி அறிவித்துள்ளார்.