கடலூர் பாமக - விசிக பிரச்சினையில் ஸ்டாலின் அரசியல் செய்வதாக அன்புமணி குற்றச்சாட்டு
கடலூர் பாமக-விசிக மோதல் பிரச்சினையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தண்ணீருக்கு பதிலாக பெட்ரோல் ஊற்றி, அரசியல் செய்ய பார்க்கிறார். பாமக-விசிக இடையே சண்டையை மூட்டி விட்டு வேடிக்கை பார்ப்பதை முன்பு கருணாநிதி செய்தார். தற்போது, மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார், என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார்.
சோளிங்கர்: “கடலூர் பாமக - விசிக மோதல் பிரச்சினையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தண்ணீருக்கு பதிலாக பெட்ரோல் ஊற்றி, அரசியல் செய்ய பார்க்கிறார். பாமக - விசிக இடையே சண்டையை மூட்டி விட்டு வேடிக்கை பார்ப்பதை முன்பு கருணாநிதி செய்தார். தற்போது, மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார்,” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் பாமக நிர்வாகி இல்லத் திருமண நிகழ்வில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (நவ.7) கலந்துகொண்டார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “கடலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் பாமக மோதல் விவகாரத்தில், தாக்குதலுக்கு உள்ளான இளைஞர்களுக்கு ஆறுதல் கூற சென்ற பாமக நிர்வாகிகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் போடப்பட்டுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.