தொடர் மழையால் நீர் வரத்து அதிகரிப்பு: குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை
தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. நேற்று பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலை காணப்பட்டது. இன்று காலை வரை கடனாநதி அணைப் பகுதியில் மட்டும் 2 மி.மீ. மழை பதிவானது.
தென்காசி: தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. நேற்று பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலை காணப்பட்டது. இன்று காலை வரை கடனாநதி அணைப் பகுதியில் மட்டும் 2 மி.மீ. மழை பதிவானது. இந்நிலையில், இன்று காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஆலங்குளம், பாவூர்சத்திரம், தென்காசி, இலத்தூர், சுரண்டை சுற்றுவட்டார பகுதிகளில் நீண்ட நேரமாக லேசான மழை தூறிக்கொண்டே இருந்தது.
காலை 9 மணி முதல் நீண்ட நேரமாக மழை தூறிக்கொண்டே இருந்ததால் விவசாய பணிகள், கட்டுமான பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டன. பண்பொழி, மேக்கரை, சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்தது.