சென்னை ‘ரெட் அலர்ட்’ நிலை என்ன? - வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் விளக்கம்
காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடலினுள் இருக்கிறது. அது நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இன்னும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழக்கவில்லை. கரையை நோக்கி வந்துகொண்டிருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை: “காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடலினுள் இருக்கிறது. அது நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இன்னும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழக்கவில்லை. கரையை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. நாளை காலை கரைக்கு அருகில் வருகிறபோது, மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாலும், ஏற்கெனவே பெய்த மழை பதிவுகள் ஆகியவற்றை எல்லாம் கருத்தில் கொண்டுதான் ரெட் அலர்ட் கொடுக்கப்படுகிறது” என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் எஸ்.பாலசந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் எஸ்.பாலசந்திரன் இன்று (அக்.16) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 5 இடங்களில் அதி கனமழையும், 48 இடங்களில் மிக கனமழையும், 21 இடங்களில் கனமழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் 30 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.