‘பேச்சுரிமை என்ற பெயரில்...’ - நடிகை கஸ்தூரிக்கு முன்ஜாமீன் மறுத்த நீதிபதி கூறியது என்ன?

தெலுங்கு பேசும் மக்களை அவதூறாகப் பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரின் முன்ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன், பேச்சுரிமை என்ற பெயரில் வெறுப்புணர்வை பரப்பவோ, சமூக மோதல்களை ஏற்படுத்தவோ கூடாது, என்று அறிவுறுத்தியுள்ளது.

‘பேச்சுரிமை என்ற பெயரில்...’ - நடிகை கஸ்தூரிக்கு முன்ஜாமீன் மறுத்த நீதிபதி கூறியது என்ன?

மதுரை: தெலுங்கு பேசும் மக்களை அவதூறாகப் பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரின் முன்ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கஸ்தூரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “கேவலமான, தரக்குறைவான அறிக்கை வெளியிடுபவர்கள், பேசுபவர்கள் மீது சட்டத்தின்படி வழக்கு தொடரப்பட்டால், அதிலிருந்து தப்ப மன்னிப்பு கோரினாலும், இனி ஏற்கப்படாது என்ற வலுவான செய்தியை நீதிமன்றம் அனுப்ப வேண்டும். இல்லையெனில் யார் வேண்டுமானாலும் வெறுக்கத்தக்க பேச்சுகளை பேசிவிட்டு, அதிலிருந்து தப்புவதற்காக மன்னிப்பு கோரலாம் என்றாகிவிடும்” என்றார்.றிவுறுத்தியுள்ளது.

சென்னையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பங்கேற்ற நடிகை கஸ்தூரி, தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக மதுரை திருநகர் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் கஸ்தூரி மனு தாக்கல் செய்தார். இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, கஸ்தூரிக்கு முன்ஜாமீன் வழங்க அரசுத் தரப்பில் கடும் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தீர்ப்பை நீதிபதி தள்ளிவைத்தார்.