“சிறு வணிகர்களின் கடை வாடகைக்கு 18% ஜிஎஸ்டி என்பது பாஜக அரசின் கொடூரத் தாக்குதல்” - மார்க்சிஸ்ட்
மோடி அரசுசிறு வணிகர்கள் நடத்தும் கடை வாடகைக்கும் 18 சதவீதம் ஜிஎஸ்டி விதித்துள்ளது சிறு வணிகர்களை முற்றாக சீரழித்து, இத்தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு வணிகர்கள் மீது தொடுக்கப்பட்ட கொடூர தாக்குதலாகும் என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை: “கார்ப்பரேட் நிறுவனங்களின் வரியை 30 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக குறைத்துள்ள மோடி அரசு, சிறு வணிகர்கள் நடத்தும் கடை வாடகைக்கும் 18 சதவீதம் ஜிஎஸ்டி விதித்துள்ளது சிறு வணிகர்களை முற்றாக சீரழித்து, இத்தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு வணிகர்கள் மீது தொடுக்கப்பட்ட கொடூரத் தாக்குதலாகும். மத்திய பாஜக அரசின் இந்த முடிவை வன்மையாக கண்டிப்பதோடு, உடனடியாக திரும்ப பெற வேண்டும்,” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாஜக தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்றதிலிருந்தே பெரும் கார்ப்பரேட்டுகளுக்கு சலுகைகளை வாரி வழங்குவதையும், சிறு - குறு தொழில் முனைவோர் மற்றும் சிறு வணிகர்களுக்கு விரோதமான நடவடிக்கைகளை அமலாக்குவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளது.இதன் ஒரு பகுதியாக, வாடகை கடைகளை நடத்தி வரும் சிறு வணிகர்கள் கடை வாடகை தொகையில் 18 சதவீதம் ஜிஎஸ்டி வரியை இனி ஒவ்வொரு மாதமும் செலுத்த வேண்டும் என கடந்த செப்டம்பர் 23-ல் கூடிய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.