‘மின்னல் கொடி’ - தமிழ் சினிமாவின் முதல் ஸ்டன்ட் குயின்!
இந்தியாவில் சினிமா தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில் கொல்கத்தா மற்றும் மும்பையில்தான் தமிழ் உட்பட பல்வேறு மொழி படங்கள் தயாரிக்கப்பட்டன.
இந்தியாவில் சினிமா தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில் கொல்கத்தா மற்றும் மும்பையில்தான் தமிழ் உட்பட பல்வேறு மொழி படங்கள் தயாரிக்கப்பட்டன. தமிழ் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருடன் வட இந்திய இயக்குநர்களும் தமிழ்ப் படங்களை இயக்கி வந்தனர். அதில் ஒருவர் கே.அமர்நாத்!
தனது 21 வயதில், ‘மட்வாலி ஜோகன்’ என்ற இந்திப் படத்தை இயக்கிய இவர், தமிழில் 5 படங்களை இயக்கியிருக்கிறார். அவை, டேஞ்சர் சிக்னல், பக்கா ரவுடி, மின்னல் கொடி, வீர ரமணி, பாக்ய லீலா. இவை அனைத்தும் ஆக்ஷன் த்ரில்லர் படங்கள். ஸ்டன்ட் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டவை. இந்தப் படங்களில் தமிழ் சினிமாவின் முதல் ‘ஸ்டன்ட் குயின்’ கே.டி.ருக்மணி நாயகியாக நடித்தார். இவர் புராணக் கதைகள் உட்பட வேறு சில படங்களில் நடித்திருந்தாலும் ‘ஸ்டன்ட் குயின்’ என்பது அவர் பெயருடன் ஒட்டிக்கொண்டது.