ரவுடிகள் பற்றிய கருத்துக்காக மனித உரிமை ஆணையத்தில் காவல் உதவி ஆணையர் ஆஜர்
சென்னை மாநகர காவல் ஆணையர் அருணின் ரவுடிகள் குறித்த கருத்துக்கு திருவொற்றியூர் காவல் உதவி ஆணையர் இளங்கோவன், மாநில மனித உரிமை ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.
சென்னை: சென்னை மாநகர காவல் ஆணையர் அருணின் ரவுடிகள் குறித்த கருத்துக்கு திருவொற்றியூர் காவல் உதவி ஆணையர் இளங்கோவன், மாநில மனித உரிமை ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.
திருவொற்றியூர் சுற்றியுள்ள பகுதிகளில் காவல் உதவி ஆணையர் இளங்கோவன் தலைமையிலான போலீஸார், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அங்கு வசிக்கும் சரித்திர பதிவேடு ரவுடிகளின் வீடுகளுக்கு சென்று அவர்களின் குடும்பத்தினரை சந்தித்தனர். அப்போது அவர்களிடம் ஒழுக்கமாக இருக்க வேண்டும் இல்லை என்றால் என்கவுன்ட்டர் செய்யவும் வாய்ப்புள்ளது என்று கூறிய காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வைரலானது.