ரூ.50,000 வரை விலை - புதுச்சேரியில் ரசாயன கலப்பின்றி விதவிதமாக தயாராகும் விநாயகர் சிலைகள்!
புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்திக்காக ரசாயன கலப்பின்றி விதவிதமான விநாயகர் சிலைகள் தயாராகி வருகின்றன. ஒரு சிலையின் விலை ரூ.50 ஆயிரம் வரை இருந்த போதும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலான எண்ணிக்கையில் விநாயகர் சிலைகள் விற்பனையாகி வருவதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
புதுச்சேரி: புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்திக்காக ரசாயன கலப்பின்றி விதவிதமான விநாயகர் சிலைகள் தயாராகி வருகின்றன. ஒரு சிலையின் விலை ரூ.50 ஆயிரம் வரை இருந்த போதும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலான எண்ணிக்கையில் விநாயகர் சிலைகள் விற்பனையாகி வருவதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா செப்.7-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் பல்வேறு இடங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வீட்டில் வைத்து வணங்குவதற்கான சிறிய சிலைகள் தயாராவதுபோல் வீதிகளில் வைத்து வணங்க பெரிய சிலைகளும் தயாராகி வருகின்றன. புதுச்சேரியில் கூனிமுக்கு கிராமத்தில் நான்கு தலைமுறைகளாக விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இப்பகுதியில் உள்ள பல குடும்பங்கள் பாரம்பரியமாக விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.